'தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்க' - ஆசிரியர் கூட்டமைப்பு பாராளுமன்றம் நோக்கி பேரணி

'தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்க' - ஆசிரியர் கூட்டமைப்பு பாராளுமன்றம் நோக்கி பேரணி
'தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்க' - ஆசிரியர் கூட்டமைப்பு பாராளுமன்றம் நோக்கி பேரணி

“தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் டெல்லி ஜந்தர் மந்திரில் பாராளுமன்றம் நோக்கி பேரணி நடைபெற்றது.

இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு சங்க நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்

இது குறித்து புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அம்சங்கள் அடங்கிய  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய ஓய்வூதிய  திட்டத்தை  ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மற்றொரு கோரிக்கையாக, மாணவர்களின் கல்வியை வணிகமையமாக்குகின்ற குறிப்பாக, ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வியை பறிக்கும் வைக்கில் இந்த தேசிய கல்விக் கொள்ளை உள்ளது. இதனை உடனே ரத்து செய்ய வேண்டும்” என  கேட்டுக்கொள்கிறோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com