சிறு பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான் - ஆ.ராசா பேட்டி
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறினார்.
மருத்துவமனை வளாகத்தில் அவர் அளித்த பேட்டியில், “கருணாநிதியின் உடல்நிலையில், தாற்காலிகமாக சிறிது நேரம் ஒரு பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அந்த பின்னடைவு சீர் செய்யப்பட்டு, அவர் நல்ல நிலையில் இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வதந்திகளை நம்ப வேண்டாம். ” என்று கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து சற்று நேரத்திற்கு முன்பு காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “கருணாநிதியின் உடல்நிலையில் முதலில் பின்னடைவு ஏற்பட்டது, இருப்பினும் மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீராகி வருகிறது. கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

