\
சென்னை: 'சந்தனக்கூடு' விழாவுக்கான கொடியேற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை: 'சந்தனக்கூடு' விழாவுக்கான கொடியேற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை: 'சந்தனக்கூடு' விழாவுக்கான கொடியேற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஏ.ஆர்.ரஹ்மான்!
Published on

சென்னை அண்ணா சாலையில் உள்ள புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூஸா ஷா காதரி தர்காவில் 'சந்தனக்கூடு' நாளுக்கான கொடியேற்ற நிகழ்வில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று இரவு கலந்துகொண்டிருக்கிறார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள புகழ்பெற்ற 'ஹஸ்ரத் சையத் மூஸா ஷா காதரி' தர்காவில் இஸ்லாமியர்களின் வழிபாடு முறையான 'சந்தனக்கூடு' என்ற 15 நாட்கள் நடைபெறும் நிகழ்விற்காக கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.

நேற்று பிறை தெரிந்ததும் சந்தனக்கூடு நிகழ்விற்கான அறிவிப்பு வெளியானது. இதையொட்டி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது. அதற்கு சிறப்பு விருந்தினராக தலைமை காஜி முகமது அக்பர் சாஹிப் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்வில் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.

தர்காவில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மாற்று மதத்தை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதனால் தர்காவில் சைவ விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com