கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!

கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!

கால் உடைந்த நாய் குட்டியை 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே தூக்கி சென்று கால்நடை மருத்துவமனையில், சிறுவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சின்ன சூண்டிப் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் அணிஷ் மற்றும் மகேஷ். இவர்கள் இருவரும் பெண் நாட்டு நாய் குட்டி ஒன்றை பாசமாக வளர்த்த வருகிறார்கள். குட்டி நாய் கீழே குதிக்கும் போது அதன் கால் ஒன்று உடைந்திருக்கிறது. நாய்க்குட்டிக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் கூடலூர் அல்லது பார்வுட் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் குட்டி நாய் வலியால் துடித்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சிறுவர்களான சகோதரர்கள், சின்ன சூண்டி பகுதியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்தே நாய்க்குட்டியை தூக்கிச்சென்று பார்வுட் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு நாய் குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நாய் குட்டியின் கால் எலும்பு உடைந்து உள்ள நிலையில் அதற்கு மருத்துவர் கட்டுப் போட்டுள்ளார். பொதுவாக நாட்டு நாய்களை கண்டுகொள்ளாமல் விடும் ஒரு சிலர் மத்தியில் கால் உடைந்த நாய்க்குட்டியை, நடந்தே தூக்கிச் சென்று சிகிச்சை அளித்து பராமரித்து வரும் சகோதரர்கள் மக்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com