கழிவுநீர் கால்வாயில் சிக்கித்தவித்த நாய்க்குட்டி – போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்

கழிவுநீர் கால்வாயில் சிக்கித்தவித்த நாய்க்குட்டி – போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்
கழிவுநீர் கால்வாயில் சிக்கித்தவித்த நாய்க்குட்டி – போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்

கழிவுநீர் கால்வாயில் சிக்கிய நாய் குட்டியை சுமார் 4 மணி நேரம் போராடி பத்திரமாக ஆவடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கௌரிபேட்டை, ஈஸ்வரன் கோவில் தெருவில் நாய்க்குட்டி ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து சிக்கிக் கொண்டது. இதனக்கண்ட அப்பகுதி மக்கள் நாய்க்குட்டியை மீட்க முயன்றும் முடியாததால் ஆவடி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு நாய்க்குட்டியை மீட்க தீவிரமாக நாய்க்குட்டி சிக்கி இருந்த இடத்திற்கு நேராக துளையிட்டு நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட நாய்க்குட்டி பப்பியை கைக்குழந்தை போல அப்பகுதி மக்கள் பெற்றுக்கொண்டு உடனடியாக குளிப்பாட்டி சுத்தம் செய்து திருஷ்டி கழித்து, பொட்டு வைத்தனர்.

இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையும் கொடுத்தனர். நாய்க்குட்டி என்றும் பாராமல் அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பால் உயிருக்கு போராடிய நாய்க்குட்டியை ஆவடி தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com