கடத்தல் வழக்கில் உதவி ஆய்வாளர் கைது

கடத்தல் வழக்கில் உதவி ஆய்வாளர் கைது

கடத்தல் வழக்கில் உதவி ஆய்வாளர் கைது
Published on

சேலம் அருகே இரண்டு பேரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ‌உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்த சக்திவேல் - பூபதி ஆகியோர் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. பணத்திற்கு பதில் 9 செல்போன்களை பூபதியிடம் சக்திவேல் கொடுத்ததாக தெரிகிறது. அவர் கொடுத்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் செல்போன்களுக்கு பதில் மிட்டாய் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூபதியின் நண்பர்கள் 7 பேர் சக்திவேலையும், அவரது தோழர் பிரபாகரனையும் கடத்திச் சென்‌று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதற்கு அஸ்தம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணி உடந்தையாக இருந்ததாகவும், கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமிருந்து 40 ஆயிரம் ரூபாயை பெற்று கடத்தல் கும்பல் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் பங்கிட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி உள்பட 8 பேரை கைது செய்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com