madurai
maduraipt

சமூக அக்கறையால் பறிபோன உயிர்.. மதுரையில் சோகம்!

மதுரை பந்தல்குடி பகுதியில் கால்வாயில் குப்பைகளை அகற்ற முயன்றவர் தவறிவிழுந்து உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

கோரிப்பாளையம் அருகே பந்தல்குடி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர், அங்குள்ள கால்வாயில் அதிகளவு குப்பைகள் இருந்ததால் அதனை அகற்ற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால்வாய் நீரில் தவறிவிழுந்துள்ளார். எவ்வளவு முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்பதால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

madurai
தமிழ்நாடு முழுக்க வெளுத்து வாங்கிய மழை.. சில இடங்களில் வெள்ளம்.. பல இடங்களில் விவசாயிகள் மகிழ்ச்சி!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் பாண்டியராஜனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீரில் அடித்துச் செல்லப்பட்டவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பாண்டியராஜன்
பாண்டியராஜன்

4 மணிநேர தீவிர தேடுதலுக்கு பிறகு பாண்டியராஜன் சடலமாக மீட்கப்பட்டார். கால்வாயில் புதைந்து கிடந்த பாண்டியராஜனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com