தமிழ்நாடு
விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த நபர் உயிரிழப்பு
விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த நபர் உயிரிழப்பு
வந்தவாசி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் வேலை நிமித்தமாக அருகில் இருந்த செல்வராஜ் என்பவரது விவசாய நிலத்தின் வழியாக சென்றார்.
அப்போது வீரமுத்து அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததாக கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வந்தவாசி போலீசார், வீரமுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.