“விடாமல் குட்டி யானையை சீண்டிய நபர்” - வைரலாகும் வீடியோ

“விடாமல் குட்டி யானையை சீண்டிய நபர்” - வைரலாகும் வீடியோ

“விடாமல் குட்டி யானையை சீண்டிய நபர்” - வைரலாகும் வீடியோ
Published on

கோவை அடுத்த ஆனைக்கட்டி வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் இரவில் சாலையோரமாக நின்றுக்கொண்டிருந்த யானையை ஒரு நபர் சீண்டுவதும், தொடர்ந்து சீண்டிய அவரை யானை துரத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கோவை அடுத்த தமிழக-கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைக்கட்டி வனப்பகுதியில் இரவு நேரத்தில் பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து ஓட்டுனர், சாலையின் ஓரமாக குட்டி யானைகள் இரண்டு நின்றிருந்ததை பார்த்து, பேருந்தை  நிறுத்தினார். அப்போது எதிர் திசையில் வந்துக் கொண்டிருந்த இருச்சக்கர வாகனமும் யானை இருப்பதை அறிந்து வண்டியை நின்றுவிட்டனர். 

இந்நிலையில் பேருந்திலிருந்து இறங்கிய ஒரு நபர், யானையை நோக்கி சென்றதுடன், யானை குட்டியை சீண்டியுள்ளார். அந்தக் குட்டி யானை அந்த நபரை துரத்தும் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் காட்சிகள் அனைத்தும் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் காட்சிப்படுத்தியுள்ளார். அதிருஷ்டவசமாக அந்த நபருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. 

இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருவதாகவும், நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வனம் ஆக்கிரமிப்பால் யானைகள் உட்பட வனவிலங்குகளின் வாழ்விடம் பாதிக்கப்படுவதாகவும், இருப்பினும் மனிதர்கள் சீண்டாதவரை யானைகள் தாக்காது என சின்னத்தம்பி விவகாரத்தில் சொல்லப்பட்டு வரும் நிலையில், அந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் இந்தச் சம்பவம் உள்ளதாகவும், அந்த நபரை கைது செய்ய வேண்டும் என விலங்கு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com