திருச்சியில், வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் வரும் 25ஆம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மைக்கேல் என்பார் மனு அளித்துள்ளார். மனுவில் நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் அங்குள்ள குளத்தை ஆக்கிரமிப்பு செய்து, நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் மீது ஆக்கிரமிப்புகள் தொடர்பாக வழக்குகள் உள்ள நிலையில், இளையராஜா நிகழ்ச்சிக்காக மேலும் ஒரு குளத்தை ஆக்கிரமிப்பு செய்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.