\
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவர் போக்சோவில் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவர் போக்சோவில் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவர் போக்சோவில் கைது
Published on

வால்பாறையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் முதல் பிரிவில் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சுடலை. இவர் நேற்றைய தினம் தனது மனைவியுடன் பணிக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரின் இளைய மகள் (12) வீட்டில் இருந்துள்ளார். அக்கம் பக்கம் ஆளில்லாத நேரத்தில் அப்பகுதில் அருகே வசிக்கும் ரூபன் (49) என்பவர், தனியாக இருந்த அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிறுமியின் தந்தை சுடலைமணி என்பவர் வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் முருகேசனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட ரூபன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com