தமிழ்நாடு
தாம்பரம் ரயில் நிலையத்தை அலங்கரிக்கும் விழிப்புணர்வு ஓவியம்
தாம்பரம் ரயில் நிலையத்தை அலங்கரிக்கும் விழிப்புணர்வு ஓவியம்
அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக சென்னை தாம்பரம் ரயில் நிலைய முகப்பு பகுதியில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
ரெனால்ட் நிசான் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் வரையப்பட்ட இந்த ஓவியத்திற்கு 20 நாட்களுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.