child deathpt desk
தமிழ்நாடு
ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு - தேனியில் நிகழ்ந்த சோகம்!
தேனி அருகே தொண்டையில் மிட்டாய் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கணவனை இழந்த மலர்நிகா என்பரது ஒன்றரை வயது குழந்தை, ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட போது மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. செய்வதறியாது குழந்தையை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மலர்நிகா அழைத்துச் சென்றுள்ளார்.
publicpt desk
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தையின் உணவுக் குழாய்க்குள் மிட்டாய் சிக்கிக் கொண்டதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மிட்டாய் போன்றவற்றை கொடுக்கக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஜெல்லி போன்றவற்றை கட்டாயம் குழந்தைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.