எஸ்டேட் பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வடமாநில சிறுவன்

எஸ்டேட் பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வடமாநில சிறுவன்
எஸ்டேட் பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வடமாநில சிறுவன்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் வடமாநில சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள செம்மராங்குளம் தனியார் தங்க நகைக்கடை நிறுவனத்திற்குச் சொந்தமான எஸ்டேட்டில் பீகாரைச் சேர்ந்த கௌதம்குமார் (16) என்ற சிறுவன் கடந்த வாரம் முதல் பணிபுரிந்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் கௌதம்குமார் பணியில் இருக்கும்போது தீடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து சிறுவனுடன் இருந்தவர்களிடம் விசாரித்ததில் புரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்ததாகவும், அட்டை பூச்சி கடித்ததால் உயிரிழந்ததாகவும், லோ பிரசர் காரணமாக உயிரிழந்ததாகவும் பல காரணமாக கூறுகின்றனர்.

இதையடுத்து கௌதம்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com