\
மாணவர்களின் வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க புதிய வழி

மாணவர்களின் வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க புதிய வழி

மாணவர்களின் வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க புதிய வழி
Published on: 

பள்ளி மாணவர்களுக்கு வைட்டமின் டி குறைபாட்டை தவிர்ப்பதற்காக சூரிய வெளிச்சத்தில் விளையாட வைக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வு நேரங்கள், இடைவேளைகளில் மாணவர்களை வெயிலில் விளையாடச் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து வித பள்ளிகளிலும் சூரிய வெளிச்சத்தின் நன்மைகள் குறித்து காலையில் நடைபெறும் இறை வணக்கக் கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. பல மாணவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சோர்வு உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இதனால், இந்த அறிவுரையை பள்ளிக் கல்வி இயக்ககம் முன்னெடுத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com