புதிய தலைமுறை செய்தி எதிரொலி - வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க ஏற்பாடு!

புதிய தலைமுறை செய்தி எதிரொலி - வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க ஏற்பாடு!
புதிய தலைமுறை செய்தி எதிரொலி - வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க ஏற்பாடு!

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள திருப்பணிபுரம் கிராமத்திற்கு மின்சாரம் வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில் புதிய தலைமுறை களத்தில் இறங்கி பாதிப்பை எடுத்துக்காட்டியது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆறு இரட்டை மின்கம்பங்களுடன் சுமார் 52 மின்கம்பங்கள் மூலம் உயர் அழுத்த மின் பாதைகள் கொண்டு சென்று 63 KVA மின்மாற்றி அமைத்து மின் இணைப்பு வழங்க மின்பகிர்மான கழகம் மதிப்பீடு தயார் செய்கிறது. 

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள திருப்பணிபுரம் கிராமத்தில், மின்சாரம் குடிநீர் சாலை வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்பட்டவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில், அக்கிராமத்துக்கு  தேவையான மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய தலைமுறை வாயிலாக திருப்பணிபுரம் கிராமத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து செய்தி தொகுப்பு பிரத்யேகமாக வெளியானது. வெளியான இந்த செய்தி தொகுப்பு தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் திருநெல்வேலி பிரிவில் மக்கள் குறைகளை கேட்கும் அதன் அலுவலக வாட்ஸப் குரூப்பில் பதிவிடப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக மனித உரிமை ஆணையம் அறிவுறுத்திய திருப்பணிபுரம் கிராமத்தில் புதிதாக மின் கம்பங்கள் நட்டு மின்சாரம் வழங்க மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. இதுகுறித்த தகவல்களை புகைப்படங்களுடன் திருநெல்வேலி மாவட்ட மின் பகிர்மான அலுவலக வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளபடி, ’’தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை கிராமமான பாபநாசம் கீழ் முகாம் பிரிவிற்குட்பட்ட திருப்பணிபுரம் கிராமத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆணையிட்டது.

அவ்விடங்களுக்கு மின் கம்பங்களும் மின் பாதைகளும் அமைக்கவேண்டிய இடம் வனத்துறையின் வசம் இருப்பதால் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க தற்பொழுது மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியினை திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை மின் பொறியாளர்  எஸ் குருசாமி நேரில் ஆய்வு செய்தார்.

அப்பொழுது திருப்பணிபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல் செய்து தேவைகளை கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக வழங்கப்பட்ட சேமிப்புக்கலனுடன் கூடிய ( BATTEERY ) சூரிய ஒளி மின்விளக்குகளையும் ஆய்வு செய்தார்கள்.

மேலும் ஆய்வின்போது தாமிரபரணி ஆறு மூன்று இடங்களில் கிளை ஆறுகளாக பிரிவதால் ஆறு இரட்டை மின்கம்பங்களுடன் சுமார் 52 மின்கம்பங்கள் மூலம் உயர் அழுத்த மின் பாதைகள் கொண்டு சென்று 63 KVA மின்மாற்றி அமைத்து அங்கு இருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மதிப்பீடு தயார்செய்ய செயற் பொறியாளர் கல்லிடைக்குறிச்சி கோட்டம் சுடலையாடும் பெருமாள் உதவி செயற்பொறியாளர் விக்கிரமசிங்கபுரம்ராமகிளி உதவி மின் பொறியாளர் பாபநாசம் கீழ் முகாம் விஜயராஜ் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்தார்கள் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என பதிவிட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com