போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள புதிய பாடத்திட்டம் உதவும்: செங்கோட்டையன்

போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள புதிய பாடத்திட்டம் உதவும்: செங்கோட்டையன்
போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள புதிய பாடத்திட்டம் உதவும்: செங்கோட்டையன்


போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள புதிய பாடத்திட்டம் உதவும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத் திட்ட வரைவை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.பொதுமக்களின் கருத்துகேட்புக்காக இணையதளத்தில் வரைவு பாடத்திட்டம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் புதிய தலைமுறையிடம் பேசுகையில், வரைவுப்பாடத்திட்டத்தினை பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு 4 மாதங்களில் முடித்துள்ளது. இந்தக்குழுவில் சிறந்த கல்வியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்தப்பாடதிட்டத்தில் புதிய மாற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழரின் பண்பாடு, கலாச்சாரம், அறிவியல் கல்வி போன்றவைகள் இணைக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப தொழில் கல்வியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. 

வரைவு பாடத்திட்டம் குறித்து பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து கூறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் பிற பாடத்திட்டங்களுக்கு நிகராக போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com