\
பேருந்து படிக்கட்டிலிருந்து குழந்தையுடன் தவறி விழுந்த தாய்! நெஞ்சை உறையவைக்கும் காட்சிகள்!

பேருந்து படிக்கட்டிலிருந்து குழந்தையுடன் தவறி விழுந்த தாய்! நெஞ்சை உறையவைக்கும் காட்சிகள்!

பேருந்து படிக்கட்டிலிருந்து குழந்தையுடன் தவறி விழுந்த தாய்! நெஞ்சை உறையவைக்கும் காட்சிகள்!
Published on: 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் ஓர் உணவகம் எதிரே தனியார் பேருந்து வரும்போது, அப்பேருந்தின் படிக்கட்டில் இருந்து ஒரு தாய் குழந்தையுடன் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் ஓர் உணவகம் அருகே அதிவேகத்தில் வரும் தனியார் பேருந்து திடீரென பிரேக் பிடிக்கும்போது படிக்கட்டில் இருந்து குழந்தையுடன் தாய் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து பேருந்தை நிறுத்தி அவரை மீட்டுள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது கடலூர் மாவட்டம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.

ஆனால் காவல்துறை தரப்பில் இந்த விபத்து குறித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் எந்த விதமான புகாரும் பதிவாகவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே பலமுறை படிக்கட்டில் இருந்து பயணிகள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவங்கள் பல அரங்கேறியுள்ள நிலையில், குழந்தையுடன் தாய் விழும் சிசிடிவி காட்சிகள் கடும் அதிர்வலைகளை கடலூர் மாவட்டத்தில் கிளப்பியுள்ளது. இதனால் கடலூர் மாவட்ட காவல்துறையும் வைரலாக பரவும் அக்காட்சியில் தவறி விழுந்த பெண் யார் என்பதைக் கண்டறியும் விசாரணையில் இறங்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com