திருக்கடையூர் அமிர்தசரேஸ்வரர் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற அமைச்சர் சேகர்பாபுவின் 60-ம் கல்யாணம்!

தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு இன்று திருக்கடையூர் அமிர்தசரேஸ்வரர் ஆலயத்தில் 60-ம் கல்யாண சஷ்டியப்த பூர்த்தி நடைபெற்றது.
சேகர் பாபு
சேகர் பாபுPT

தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு நேற்று திருக்கடையூர் அமிர்தசரேஸ்வரர் ஆலயத்தில் 60-ம் கல்யாணம் சஷ்டியப்த பூர்த்தி நடைபெற்றது.

திருக்கடையூர் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்பாள், அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி இருக்கின்றார். பதினாறு மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த சிவபெருமான் சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி இருக்கின்றார்.

இத்தலத்திற்கு தம்பதிகள் தங்களது 60 மற்றும் 80 வது வயது பூர்த்தியானதும் தம்பதி சமேதமாக இங்கு வந்து திருமணம் செய்துக் கொள்வார்கள்.

இங்கு சேகர் பாபு தனது அறுபதாவது வயது பூர்த்தியானதை அடுத்து தனது மனைவியுடன் இங்கு வந்து திருமணம் செய்து கொண்டார். இது இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக அவர் மனைவியுடன் கோவிலுக்கு வந்த சேகர்பாபுவிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு தம்பதி கோபூஜை மற்றும் யாகசாலை நிகழ்சியில் கலந்துக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து சஷ்டியப்த பூர்த்தி செய்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com