\
எஸ்.பி..பி.க்கு நினைவு இல்லம் கட்டப்படும்: சரண் தகவல்

எஸ்.பி..பி.க்கு நினைவு இல்லம் கட்டப்படும்: சரண் தகவல்

எஸ்.பி..பி.க்கு நினைவு இல்லம் கட்டப்படும்: சரண் தகவல்
Published on
எஸ்.பி.பி.க்கு நினைவு இல்லம் கட்டப்படும் என்று அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
 
இதையடுத்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை இல்லத்தில் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவு இல்லம் கட்டப்படும் என்றும் இதுகுறித்து அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவரது மகன் எஸ்.பி.சரண் பேட்டியளித்துள்ளார்.
 
மேலும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட காவல்துறையுடன் ஆலோசித்து மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com