சாலையில் நடந்து சென்ற நபரை முட்டிய மாடு – குடல் சரிந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

நடந்து சென்ற நபரை மாடு முட்டியதில் குடல் சரிந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
cow
cowpt desk

சென்னை நங்கநல்லூர், பி.வி.நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (51). இவர், நேற்றிரவு நங்கநல்லூர் உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அப்பகுதியில் இருந்த மாடு ஒன்று முட்டியுள்ளது. இதில், குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் கண்ணன் விழுந்துள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

nanganallur Ulavar santhai
nanganallur Ulavar santhaipt desk

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். நங்கநல்லூர் பகுதியில் மாடுகள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com