\
பிரான்ஸ் பயணி எரித்துக்கொலை ! போலீஸில் சரணடைந்த இளைஞர்

பிரான்ஸ் பயணி எரித்துக்கொலை ! போலீஸில் சரணடைந்த இளைஞர்

பிரான்ஸ் பயணி எரித்துக்கொலை ! போலீஸில் சரணடைந்த இளைஞர்
Published on

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் பிரான்ஸ் நாட்டு பயணியை எரித்துக்கொன்ற ஆவி கோட்டை பகுதியை சேர்ந்த திருமுருகன் என்ற இளைஞர் கைது கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அடுத்த ஆவி கோட்டை கிராமத்தை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் திருமுருகன்.  29 வயதான இவர், மாமல்லபுரத்தில் கல்லூரியில் படிக்கும் பொழுது வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Pierre Boutter இவருக்கும் திருமுருகனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் இணைந்து மது அருந்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் திருமுருகன் தனது சொந்த ஊரான ஆவிகோட்டையில் சென்ற நிலையில், கடந்த 5ஆம் தேதி திருச்சி வந்த பிரான்ஸ் நாட்டுப் சுற்றுலா பயணி Pierre Boutter திருமுருகனுக்கு கால் செய்து தானும் உங்கள் ஊருக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சொந்த ஊருக்கு அழைத்து சென்ற திருமுருகன் இருவரும் சேர்ந்து ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

  அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் தள்ளிவிடப்பட்டத்தில் Pierre Boutter மயக்க நிலைக்குச் சென்று கீழே விழுந்துள்ளார். பயந்துபோன திருமுருகன் வீட்டிலிருந்த பெட்ரோல் டீசல் எடுத்து அவர் மீது ஊற்றி எரித்து கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த சாம்பலை 3 மூட்டைகளில் கட்டி மதுக்கூர் அருகே உள்ள உக்கடை வாய்க்காலில் வீசியுள்ளார். இந்த நிலையில் மனம் மாறிய திருமுருகன்  மதுக்கூர் காவல் நிலையத்திற்கு சென்று தான் இதுபோல் கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்துள்ளார்.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த காவல்துறை, திருமுருகனை கைது செய்து சாம்பலை கைப்பற்றி தஞ்சை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் எத்தனை பேர் கொலை செய்தனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com