\
நாமக்கல்: ஒன்றரை வயது குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தந்தை

நாமக்கல்: ஒன்றரை வயது குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தந்தை

நாமக்கல்: ஒன்றரை வயது குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தந்தை
Published on

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சுரேஷ்குமார் என்பவர் தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதை அடுத்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தபோது ஏற்பட்ட கார் விபத்தில் சுரேஷ்குமாரின் முதுகு தண்டுவடம் பகுதியில் அடிபட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டும் பிரச்னை தீராததால் மனமுடைந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவ செலவிற்கு பணமின்றி தவித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தனது ஒன்றரை வயது ஆண் குழந்தை இனியவனை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பள்ளிபாளையம் சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து திடீரென காவிரி ஆற்றின் பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்திலிருந்து தனது குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் போலீசார் ஒருமணி நேரத்திற்கு மேலாக போராடி சுரேஷ்குமார் மற்றும் குழந்தையை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடலில் இருந்து வந்த பிரச்னை காரணமாக சுரேஷ்குமார் ஒன்றரை வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com