ஜல சமாதி’ அடைந்த சிறுவன்..! - ஆட்சியர் முன் தோண்டி எடுக்கப்பட்ட உடல்

ஜல சமாதி’ அடைந்த சிறுவன்..! - ஆட்சியர் முன் தோண்டி எடுக்கப்பட்ட உடல்
ஜல சமாதி’ அடைந்த சிறுவன்..! - ஆட்சியர் முன் தோண்டி எடுக்கப்பட்ட உடல்

ஆரணி அருகே ‘ஜல சாமதி’ என்ற பெயரில் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சிறுவனின் உடல், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த படவேடு பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன். இவரது மகன் தனநாராயணன் கடந்த மாதம் ‘ஜல சமாதி’ என்ற பெயரில் விவசாய கிணறு ஒன்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டார். அவரது உடல் பெற்றோர், மூச்சு பயிற்சி பிரணயாகம் சுவாமி பழனி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தியான நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. 

இதுகுறித்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டரில் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகவும் ஆனது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரியவர, மாவட்ட ஆட்சியர் கே.எஸ் கந்தசாமி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சி.பி. சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையில் இறந்தவரின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆட்சியர், எஸ்.பி மற்றும் வட்டாச்சியர் ஜெயவேலு ஆகியோரின் முன்னிலையில் மருத்துவ குழுவினர் தனநாராயணன் உடலை தோண்டி எடுத்தனர். 

பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின், தனநாராயணன் உடலை மீண்டும் பெற்றோரிடம் மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்தது. அவர்கள் அவரது உடலை முன்பு போன்றே தியான நிலையில் அதே இடத்தில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், மருத்துவ அறிக்கை கிடைத்த உடன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com