\
திருமணத்திற்கு மறுத்த காதலியை கொன்ற காதலன் கைது

திருமணத்திற்கு மறுத்த காதலியை கொன்ற காதலன் கைது

திருமணத்திற்கு மறுத்த காதலியை கொன்ற காதலன் கைது
Published on: 

தஞ்சையில் திருமணத்திற்கு மறுத்த காதலியை கழுத்தறுத்து கொலை செய்த காதலனை‌ காவல்துறையினர் கைது செய்தனர். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் வசந்தபிரியா. அவருக்கும் அவரது அத்தை மகனான நந்தகுமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. நந்தகுமார் நல்ல வேலையில் இல்லாததால், வசந்தபிரியாவின் உறவினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேறு ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் நிச்சயம் செய்தனர். 

இந்த நிலையில் கும்பகோணம் - சென்னை சாலையில் உமா மகேஸ்வரபுரம் பகுதியில் வசந்தபிரியாவின் உடல் மீட்கப்பட்டது. காவல்துறையினர் நந்தகுமாரை நள்ளிரவு கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் வசந்தபிரியாவை நந்தகுமார் கொன்றாதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com