\
ஷோ ரூமிற்குள் புகுந்து பைக்குகளை உடைக்கும் ஆசாமி..!

ஷோ ரூமிற்குள் புகுந்து பைக்குகளை உடைக்கும் ஆசாமி..!

ஷோ ரூமிற்குள் புகுந்து பைக்குகளை உடைக்கும் ஆசாமி..!
Published on

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஷோ ரூமிற்குள் புகுந்து பைக்குகளை உடைத்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சென்னையை அடுத்த பூந்தமல்லி காட்டுப்பாக்கம் பகுதியில் ராயல் என்ஃபீல்ட் இருசக்கர வாகன ஷோ ரூம் இயங்கி வருகிறது. இதன் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மர்ம நபர் ஒருவர் சேதப்படுத்தியுள்ளார். அவர் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. உள்ளே நுழையும் அந்த நபர், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்துகிறார். வாகனங்களின் பாகங்களை சேதப்படுத்தி, அடுத்தடுத்த வாகனங்களை உடைக்கிறார். 

ஷோ ரூமின் பின் பக்கம் நிறுத்தப்பட்ட இருசக்கர  வாகனம் ஒன்றையும் அவர் சேதப்படுத்தியுள்ளார். வீடியோவில் அந்த நபரின் உருவம் தெளிவாக பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக ராயல் என்ஃபீல்டு ஷோ ரூம் சார்பில் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், யார் அந்த நபர் ? எதற்காக இருசக்கர வாகனங்களை சேதப்படுத்துகிறார் ? ஷோ ரூமில் வேலை பார்ப்பவர்களிடையே ஏற்பட்ட முன் விரோதமா ? போதை ஆசாமியா ? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com