கடையில் பொருள்கள் வாங்குவது போல் நடித்து திருட்டு -  4 பெண்களுக்கு வலை

கடையில் பொருள்கள் வாங்குவது போல் நடித்து திருட்டு -  4 பெண்களுக்கு வலை

கடையில் பொருள்கள் வாங்குவது போல் நடித்து திருட்டு -  4 பெண்களுக்கு வலை
Published on

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து கல்லாப்பெட்டியில் இருந்து 13 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த மாதம் 26ஆம் தேதி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள பேரானந்தன் என்பவரது பேன்சி ஸ்டோருக்கு ஒரு ஆண் மற்றும் 4 பெண்கள் வந்துள்ளனர். பல்வேறு பொருள்களை அவர்கள் கேட்க பேரானந்தமும் அவரது மனைவி சுமதியும் அவற்றை எடுத்துக் காட்டியுள்ளனர். 

அந்த நேரத்தில் கல்லாவில் இருந்த 13 ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு 5 பேரும் ஏதும் வாங்காமல் சென்றுவிட்டனர். அதன்பிறகு நடந்ததை அறிந்த பேரானந்தம் காவல்துறையில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை மூலம் திருடர்களை தேடி வந்த காவல்துறையினர் காடையாம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்துள்ளனர். அவருடன் திருட்டில் ஈடுபட்ட 4 பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com