தமிழ்நாடு
உணவு பாதுகாப்பு அதிகாரிபோல் நடித்து ஏமாற்றிய நபர்: ஐடி கார்டை கேட்டு மடக்கிய வியாபாரிகள்
உணவு பாதுகாப்பு அதிகாரிபோல் நடித்து ஏமாற்றிய நபர்: ஐடி கார்டை கேட்டு மடக்கிய வியாபாரிகள்
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி கடைகளில் பணம் வசூல் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்ற அந்த நபர் குறித்து சந்தேகமடைந்த கடைக்காரர்கள் சக்திவேலிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். இதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்க வியாபாரிகள் காவல்துறையில் தகவலளித்தனர்.
காவல் துறையினர் விசாரணையில் சக்திவேல் உணவு பாதுகாப்பு அதிகாரிபோல் நடித்து வியாபாரிகளை ஏமாற்ற முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.