நண்பரின் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் முத்து துரை. முத்து துரையின் நண்பர் பாண்டிகுடியைச் சேர்ந்த திருநாவுக்கரசு. இவருக்கும் முத்துவின் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சனையில் முத்துவின் மனைவியை திருநாவுக்கரசு கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொலை செய்த திருநாவுக்கரசுவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபதாரம் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து திருநாவுக்கரசு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.