“சசிகலாவின் பினாமி என என் சொத்து முடக்கம்” - நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு
சசிகலாவின் பினாமி எனக் கூறி, தனது சொத்துக்களை வருமான வரித்துறையினர் தவறாக முடக்கம் செய்ததாக வி.எஸ்.ஜே.தினகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலாவின் வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அந்த நேரம் வி.எஸ்.ஜே. தினகரன் என்பவரை சசிகலாவின் பினாமி எனக் கூறி, பெரம்பூர் ஸ்பெக்ட்ரம் வணிக வளாகத்தில் உள்ள அவருக்கு சொந்தமான சொத்துக்களையும், வருமான வரித்துறை முடக்கம் செய்தது. 2017ஆம் ஆண்டு சசிகலாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதின் தொடர்ச்சியாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டிருந்தது.
நிதி நிறுவன உரிமையாளரான வி.எஸ்.ஜே.தினகரன், பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் வணிக வளாகத்தில் ஒரு கடை மற்றும் 11 ஆயிரம் சதுர அடி நிலத்தை வாங்கியிருந்தார். அவைதான் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டவை. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக 2 வாரங்களில் அனைத்து ஆவணங்களுடன் விரிவாக பதிலளிக்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது.