லிப்ட் பொருத்தும்போது பாய்ந்த மின்சாரம் : சென்னையில் ஒருவர் உயிரிழப்பு

லிப்ட் பொருத்தும்போது பாய்ந்த மின்சாரம் : சென்னையில் ஒருவர் உயிரிழப்பு
லிப்ட் பொருத்தும்போது பாய்ந்த மின்சாரம் : சென்னையில் ஒருவர் உயிரிழப்பு

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் பொருத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சென்னை ஆதம்பாக்கம் முதல் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்நிலையில் லிப்ட் பொருத்தும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். மூன்றாவது மாடியில் லிப்ட் பொருத்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மூவரசம்பட்டை சேர்ந்த நிந்தியானந்தம் (20) என்ற இளைஞர் தூக்கிவீசப்பட்டார். 

உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற ஆதம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com