\
‘சார்ஜ்’ போட்டபடியே செல்போனை பயன்படுத்தியவர் உயிரிழப்பு

‘சார்ஜ்’ போட்டபடியே செல்போனை பயன்படுத்தியவர் உயிரிழப்பு

‘சார்ஜ்’ போட்டபடியே செல்போனை பயன்படுத்தியவர் உயிரிழப்பு
Published on

நாமக்கல்லில் சார்ஜ் போட்ட‌படியே செல்போனை பயன்படுத்தியவர் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் டவர் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தனது ஆண்ட்ராய்டு செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும்போதே செல்போனை கையில் எடுத்து இயக்கியுள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் ‌குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சார்ஜ் போட்டப்படி செல்போனை பயன்படுத்துவது, அதிக நேரம் பயன்படுத்தியதால் சூடாக இருக்கும்போது செல்போனை சார்ஜ் போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று மொபைல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com