\
கோபிசெட்டிப்பாளையம்: மின்வேலியில் சிக்கி உயிரிழந்த ஆண் யானை

கோபிசெட்டிப்பாளையம்: மின்வேலியில் சிக்கி உயிரிழந்த ஆண் யானை

கோபிசெட்டிப்பாளையம்: மின்வேலியில் சிக்கி உயிரிழந்த ஆண் யானை
Published on: 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.

டி.என்.பாளையம் வனச்சரகத்தை ஒட்டி, கொங்கர்பாளையம் கிராமத்தில் நேற்றிரவு 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று புகுந்தது. அங்கு போடப்பட்ட மின்வேலியில் சிக்கிய அந்த யானை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த டி.என்.பாளையம் வனத்துறையினர் யானை உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்க்கொண்டுள்ளனர். உயிரிழந்த யானையை உடற்கூறு பரிசோதனை செய்ய சத்தியமங்கலம் புலிகள் காப்பக மருத்துவர் அசோகன் உடற்கூராய்வு மேற்கொண்டார்.

விசாரணையில் தோட்டத்திற்குள் யானைகள் நுழைவதை தடுக்க, சட்டவிரோதமாக உயர்அழுத்த மின்சாரம் பாய்ச்சிய மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக தோட்டத்து உரிமையாளர் கார்த்திகேயனை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com