\
A low-pressure area in bay of bengal move towards Tamil Nadu
A low-pressure areaWindy

தமிழ்நாட்டை நோக்கி அடுத்த புயல்? வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. எப்போதில் இருந்து மழை தொடங்கும்?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகரும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.
Published on: 

வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை அதிதீவிர புயலாக மாறியது. அர்னாப் புயல் என பெயரிடப்பட்ட இந்த புயல் ஆந்திராவில் கரையை கடந்து பெரும் அழிவை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக 150க்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசியதால் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. மேலும் 15 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

அர்னாப் புயல் உருவாகும் முன்னர் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஆனால் புயல் உருவாகியதும் தமிழ்நாட்டில் இருந்து ஈர்ப்பதத்தை உறிஞ்சியதால் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நீடித்தது.

Windy

இந்த சூழலில் தாய்லாந்தை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக்கி அது அந்தமான் கடலை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகரும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் என்றும், இது அடுத்த 36 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த சலனம் அர்னாப் போல மிக வேகமாக தீவிரமடைவதற்கோ, புயலாக வலுபெறுவதற்கோ வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ள அவர், தாழ்வு மண்டலமாக தமிழகத்திற்கு மழை தரும் நிகழ்வாகவே இந்த நிகழ்வு அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு, இந்த தாழ்வு மண்டலம் காரணமாக நவம்பர் 1ம் தேதி இரவு முதல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் துவங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

A low-pressure area in bay of bengal move towards Tamil Nadu
இஸ்ரேல் தேர்தலில் அதிரடி ட்விஸ்ட் : எழுச்சி பெற்ற அரபு கூட்டணி.. அதிரடி முடிவை எடுத்த இடதுசாரிகள்!