பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் - வாக்கு சேகரித்த செல்லூர் ராஜூ

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் - வாக்கு சேகரித்த செல்லூர் ராஜூ

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் - வாக்கு சேகரித்த செல்லூர் ராஜூ
Published on

பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றியவர்களுக்கு இந்த இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் விறு விறுப்டைந்துள்ளது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தாய்மார்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, காய்கறி கடை, பலசரக்கு கடை மற்றும் பக்கத்து வீட்டார்களிடம் பெண்கள் சொன்னால் தான் எடுபடும். ஈரோட்டுக்கு அதிமுக தான் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தது. வரிகளை உயர்த்தி தற்போது தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டனர்.

திமுகவிற்கு எதிர்ப்பு அலை அதிகம் உள்ளது என்பதால் வெற்றி பெற பணத்தை வாரி இறைக்கின்றனர். உதய சூரியன் கோலம் போட 500 ரூபாய் கொடுப்பதெல்லாம் மக்களின் வரிப்பணம். ஈவிகேஎஸ் வீட்டிற்கு போனால் நாய் தான் இருக்கும். தென்னரசை கூப்பிட்டால் ஓடோடி வருவார் எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com