\
அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் கபசுர குடிநீர் - அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் கபசுர குடிநீர் - அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் கபசுர குடிநீர் - அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கபசுர குடிநீர் பாக்கெட்களை இலவசமாக வழங்க கோரிய வழக்கில், பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய ஆயுஷ் அமைச்சகம், கபசுர குடிநீர் விநியோகத்தை விரைவுபடுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com