தமிழ்நாடு
சென்னை: கொரோனா சிகிச்சையில் இருந்தவர் தப்பியோட்டம்
சென்னை: கொரோனா சிகிச்சையில் இருந்தவர் தப்பியோட்டம்
கொரோனா சிகிச்சையில் இருந்த கோயம்பேடு கூலி தொழிலாளி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சின்மயா நகரைச் சேர்ந்த 43 வயது நபர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 12-ம்தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக மருத்துவர்கள் அவரின் முகவரியை வைத்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தலைமறைவான அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.