கல்லணை கால்வாயில் மிதந்து வந்த மனித எலும்புக்கூடு ; பதறிய மக்கள்; இறுதியில் காத்திருந்த நகைச்சுவை!

பட்டுக்கோட்டை அருகே கல்லணை கால்வாயில் மனித எலும்புக்கூடு மிதந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலும்புக்கூடை கைப்பற்றிய போலீசார்
எலும்புக்கூடை கைப்பற்றிய போலீசார் file image

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பாளையம் பகுதி வழியாகக் கல்லணை கால்வாய் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் இன்று காலை மனித எலும்புக்கூடு ஒன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து விரைந்து வந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் ஆற்றில் மிதந்து வந்த அந்த எலும்புக்கூடை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த எலும்புக்கூடில் கழுத்து மற்றும் தலைப்பகுதி, தாடைப் பகுதி ,கை மூட்டுப் பகுதி ஆகியவை இரும்பால் ஆன ஸ்பிரிங்  கம்பியால் இணைக்கப்பட்டு இருந்தது.

எலும்புக்கூடை கைப்பற்றிய போலீசார்
"எப்போ வேணாலும் வெடிக்கும்" - 28 பெங்களூரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; கதிகலங்கிய கர்நாடகா!

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த எலும்புக்கூடு அறிவியல்  ஆய்வுக்  கூடங்களில்  பயன்படுவதற்காகச் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட எலும்புக்கூடு எனத் தெரியவந்தது. பின்னர் எலும்புக்கூட்டை  போலீசார் காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

எலும்புக்கூடு
எலும்புக்கூடு

கல்லணை கால்வாயில் எலும்புக்கூடு மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், செயற்கை எலும்புக்கூடு என்பது தெரிய வந்ததும் நகைச்சுவையாக மாறியுள்ளது.

எலும்புக்கூடை கைப்பற்றிய போலீசார்
டைரி எழுதவில்லை என மாணவனை தலையில் அடித்த ஆசிரியர் - சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com