கொடூரம்! HIVதொற்றுடன் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி சாமியார்! உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
சிவகங்கையில் ராமகிருஷ்ணன் என்ற போலி சாமியார் இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததின் பேரில், அவருக்கு இருந்ததுபோல் குழந்தைகளுக்கும் எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், வழக்கிலிருந்து பிணை வாங்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்தமனுவினை பார்த்த நீதிபதிகள் இரண்டு குழந்தைகளுக்கு அளித்த பாலியல் வன்கொடுமை குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்து மனுவை தள்ளுபடி செய்து எச்சரிக்கை விடுத்தனர்.
என்ன நடந்தது?
தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த போலி சாமியார் ராமகிருஷ்ணன் என்பவரிடம் குறி கேட்பதற்காக தனது இரண்டு குழந்தைகளை பெண்மணி ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.
ஏற்கனவே எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்ட போலி சாமியார், பாலியல் ரீதியிலாக துன்புறுத்தியதால் குழந்தைக்கும் எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பல முறை பாலியல் ரீதியாக போலிசாமியார் துன்புறுத்தி வந்த நிலையில், தாயாரும் தட்டிகேட்காததால் ஒரு கட்டத்திற்கு மேல் குழந்தைகள் தந்தை மற்றும் பாட்டியிடம் சொல்லியிருக்கிறார்கள்.
இதனையடுத்து தந்தை அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை செய்தது, நோய்த்தொற்றை ஏற்படுத்தியது உள்ளிட்ட இரண்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்..
இந்த வழக்கு சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பிணை வழங்க கோரி குற்றம் சாட்டப்பட்ட ராமகிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
ஏற்கனவே வேறு வழக்கில் தனது எச் ஐ வி தொற்றை காரணம் காட்டி பிணை வாங்கிய நிலையில், நோய் தொற்றை ஏற்படுத்திய வழக்கில் வெளியில் விடமுடியாது என விசாரணை நீதிமன்றம் கூறியுள்ளது. குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டது தொடர்பான வழக்கில் பிணை கேட்டு வழக்கறிஞர் ராஜராஜேஷ்வரன் மூலம் மேல்முறையீடு செய்தார்.
முதல் தகவல் அறிக்கை விவரங்களை இன்றைய தினம் படித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் சுதான்சு துளியா, அஹ்ஸனுதீன் அமானுல்லாஹ், குழந்தைகள் மீது இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த கருணையும் காட்ட இயலாது என கூறி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.