குட்டிகளுடன் சாலையை கடந்த காட்டுயானை கூட்டம் - அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்

குட்டிகளுடன் சாலையை கடந்த காட்டுயானை கூட்டம் - அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்

குட்டிகளுடன் சாலையை கடந்த காட்டுயானை கூட்டம் - அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்
Published on

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குட்டிகளுடன் யானை சாலையை கடந்த சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், கீழ் தட்டப்பள்ளம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் இருந்து உணவு தேடி காட்டு யானை கூட்டம் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டுள்ளது.

இந்நிலையில், தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது சாலையை கடக்கும் சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில், இரண்டு குட்டிகளுடன் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் திடீரென சாலையை கடந்து சென்றது,

இதைக் கண்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தலைதெறிக்க வாகனத்தை திருப்பி ஓட்டம் பிடித்தனர். அதில், ஒரு சில சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com