தமிழிசை உருக்கமான பதிவு
தமிழிசை உருக்கமான பதிவுமுகநூல்

'நன்றி அப்பா..மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்'- தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு தமிழிசை உருக்கமான பதிவு!

” தமிழிசை என்ற பெயர் வைத்து... இசை இசை... என்று கூப்பிடும் என் அப்பாவின்... கணீர் குரல்... இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது.” - தமிழிசை சௌந்தரராஜன்.
Published on

கடந்த சில தினங்ககளாக வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

குமரி அனந்தன் மறைவு
குமரி அனந்தன் மறைவுமுகநூல்

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார். இதனை அவரது மகளும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை உறுதி செய்துள்ளார். குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், தந்தையின் இறப்பு குறித்து உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

அதில்,” தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக . பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்... இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்... குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்... அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக... தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு... தமிழிசை என்ற பெயர் வைத்து... இசை இசை... என்று கூப்பிடும் என் அப்பாவின்... கணீர் குரல்... இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது....

வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று... சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்... இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்... சீராக வாழ்வதைக் கண்டு... பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்... என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.... மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ... அதை மனதில் கொண்டு... உங்கள் பெயரில்...

தமிழிசை உருக்கமான பதிவு
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு!

நாங்கள் செய்வோம் என்று... உறுதியோடு... உங்களை வழி அனுப்புகிறோம்... உங்கள் வழி உங்கள் வழியில்...... நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல... நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்... போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்... நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்....” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com