வேலூரில் 6 நாட்களில் 3 கொலைகள்.. அச்சத்தில் மக்கள்..!

வேலூரில் 6 நாட்களில் 3 கொலைகள்.. அச்சத்தில் மக்கள்..!

வேலூரில் 6 நாட்களில் 3 கொலைகள்.. அச்சத்தில் மக்கள்..!
Published on

காட்பாடி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவி நகைகளுக்காக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சென்னாரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணையா நாயுடு. கண்ணையா, இறந்த நிலையில் அவரது மனைவி சரோஜா அம்மாள் (70) கடந்த சில மாதங்களாக நோய் வாய்ப்பட்டு இருந்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டின் மதில் சுவர் ஏறி குதித்த அடையாளம் தெரியாத நபர்கள் சரோஜா அம்மாளை தலையில் தாக்கி அவர் அணிந்து இருந்த 4 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் சரக டிஐஜி காமினி, மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இக்கொலை தொடர்பாக லத்தேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைத்து கொலைக் குற்றவாளிகளை தேடியும் வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் நடைபெறும் 3-ஆவது கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com