இரட்டை தலைகளுடன் பிறந்த அதிசயம் ஆடு

இரட்டை தலைகளுடன் பிறந்த அதிசயம் ஆடு
இரட்டை தலைகளுடன் பிறந்த அதிசயம் ஆடு

அரியலூர் பகுதியில் வீட்டில் வளர்ந்து வந்த ஆடு ஒன்று இரட்டை தலைகளுடன் குட்டியை ஈன்றுள்ளது. 

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் வசித்து வருபவர் காளிமுத்து. இவரது வீட்டில் வளர்த்து வந்த ஆடு இன்று இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு குட்டி இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது.

இரு தலைகளுடன் பிறந்த ஆட்டுக் குட்டியை பார்த்து குடும்பத்தினர் வியப்படைந்தனர். இதுபோல் ஒரே ஆட்டுக்குட்டி இரு தலையுடன் இருந்ததை பார்த்ததில்லை என்ற அக்கம்பக்கத்தினர், கூறியதை அடுத்து அக்கிராமத்தில் உள்ளவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துவிட்டு சென்றனர். இந்நிலையில் இரண்டு மணிநேரம் கழித்து அந்த ஆட்டுக்குட்டி இறந்துவிட்டது. மேலும் மற்றொரு குட்டி உயிருடன் உள்ளது. பார்ப்பதற்கு அழகாக இருந்த அந்த ஆட்டுக்குட்டி இறந்து போனது வருத்தம் அளிப்பதாக காளிமுத்து குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com