\
விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது மின்கம்பம் விழுந்ததில் விபரீதம் - கை சிதைந்து சிகிச்சை!

விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது மின்கம்பம் விழுந்ததில் விபரீதம் - கை சிதைந்து சிகிச்சை!

விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது மின்கம்பம் விழுந்ததில் விபரீதம் - கை சிதைந்து சிகிச்சை!
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அவுரிமேடு கிராமத்தில் சாலையில் விளையாடி கொண்டிருந்தபோது மின்கம்பம் உடைந்து விழுந்து 6 ஆம் வகுப்பு மாணவி படுகாயமடைந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அவுரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கிருத்திகா (11). இவர் மதுராந்தகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அவர் வீட்டுக்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்த போது அங்கே தெருவில் நடப்பட்டு இருந்த தெருவிளக்கு மின்கம்பம் திடீரென ஓடிந்து சாய்ந்தது. இந்த விபத்தில் கிருத்திகா ஒடிந்த மின் கம்பத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டார். அதில் அவருக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது, கை சிதைந்து காயம் அதிகமாக இருப்பதால் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com