பொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை
ராசிபுரம் அருகே பொங்கல் பண்டிகைக்கு தாய் வீட்டிற்கு அனுப்பாததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பிலிப்பாகுட்டையை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் சபரிஷ்வரன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் முள்ளுக்குறிச்சியை வரதராஜ் என்பவரது 18 வயது மகள் பரமேஷ்வரிக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே கணவன் மனைவி இடையே தகராறு இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொங்கள் பண்டிகையையொட்டி தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கணவனிடம் பரமேஷ்வரி கேட்டதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பரமேஷ்வரி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெண்ணின் தந்தை வரதராஜ் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணின் உறவினர்கள் பரமேஷ்வரியை கணவன் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன் உடனடியாக அவரை கைது செய்யக்கோரி 100க்கு மேற்பட்டோர் ராசிபுரம், சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்துவந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.