‘ராகிங்’ கொடுமைக்குப் பயந்து மாணவி தீக்குளித்து மரணம்

‘ராகிங்’ கொடுமைக்குப் பயந்து மாணவி தீக்குளித்து மரணம்

‘ராகிங்’ கொடுமைக்குப் பயந்து மாணவி தீக்குளித்து மரணம்
Published on

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஓந்தாம்பட்டியை சேர்ந்த விவசாயி மணிவேல் என்பவரின் மகள் தனப்ரியா(14). இவர் அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு 9-ஆம் வகுப்பு படித்துள்ளார். அப்போது பள்ளியில் நடைபெற்ற இறுதி தேர்வில் சிறுமி தேர்ச்சி அடையவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்தச் சுழலில் நிகழாண்டு பள்ளி தொடங்கிய நாளில் பள்ளிக்கு சென்ற சிறுமி தனப்ரியா 10-ஆம் வகுப்பில் சென்று அமர்ந்துள்ளார். ஆனால் தனப்ரியா மீண்டும் பழைய வகுப்பிலேயே அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சக மாணவர்கள் கேலி செய்ததாக தெரிகிறது. 

இந்நிலையில் சக மாணவர்கள் கேலிக்கு பயந்த அந்த மாணவி ரமலான் விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். ஆனால் பெற்றோர்கள் சிறுமியை பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அந்த மாணவி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தனப்ரியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை மணிவேல் அளித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமியின் உடல், மணப்பாறை வந்தடைந்தது. அங்கு தனப்ரியாவின் உடலை கண்டு கிராமமே கதறி அழுத நிகழ்வால் அப்பகுதி முழுவதும் சோகம் பரவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com