\
முதல்வருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர்கள் 5 பேர் கொண்ட குழு அமைப்பு

முதல்வருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர்கள் 5 பேர் கொண்ட குழு அமைப்பு

முதல்வருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர்கள் 5 பேர் கொண்ட குழு அமைப்பு
Published on
முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க நோபல் பரிசுபெற்ற நிபுணர் உள்பட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் 16-வது கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையில் முக்கிய அம்சமாக தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க, 'முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு' ஒன்று உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்' என ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் விவரம் பின்வருமாறு:-
1. ரகுராம் ராஜன் - இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்
2. எஸ்தர் டப்ளோ - நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர்
3. அரவிந்த் சுப்ரமணியன் - மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் 
4. ஜீன் ட்ரெஸ் - ராஞ்சி பல்கலைக்கழகம்; டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்
5. நாராயணன் - மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com