\
விழுப்புரம் அருகே நிலத்தகராறு: ஒருவர் கொலை..!

விழுப்புரம் அருகே நிலத்தகராறு: ஒருவர் கொலை..!

விழுப்புரம் அருகே நிலத்தகராறு: ஒருவர் கொலை..!
Published on

 விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நிலத்தகராறு தொடர்பாக ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்து அமைந்துள்ளது குறிஞ்சிபை கிராமம். இந்தக் கிராமத்தில் விவசாய நிலம் அருகே உள்ள வீட்டில் ஜானகிராமன் என்பவர் வசித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் ஜானகிராமனுக்கும் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு சரவணனுக்கும் ஜானகிராமனுக்கும் குறிஞ்சிப்பை குளக்கரையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே இன்று காலை ஜானகிராமன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். தகவலறிந்து வந்த செஞ்சி துணை கண்காணிப்பாளர் நீதிராஜ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் சரவணன் தலைமறைவாக உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com