ராமநாதபுரம்: தாலுகா அலுவலகத்தில் விவசாயி மீது அதிகாரிகள் தாக்குதல்? போலீசார் விசாரணை

ராமநாதபுரம்: தாலுகா அலுவலகத்தில் விவசாயி மீது அதிகாரிகள் தாக்குதல்? போலீசார் விசாரணை
ராமநாதபுரம்: தாலுகா அலுவலகத்தில் விவசாயி மீது அதிகாரிகள் தாக்குதல்? போலீசார் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பட்டா மாறுதல் தொடர்பாக விளக்கம் கேட்ட விவசாயியை அதிகாரிகள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. விவசாயியான இவர் நேற்று முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளார். பின்னர் பூபதி, அதிகாரிகளிடம் மனுக்கள் மட்டும் பெற்றுக் கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டீர்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், பூபதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தள்ளுமுள்ளு ஆக மாறியது. அப்போது அங்கு இருந்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் மற்றும் காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் பழனி என்பவரும் விவசாயி பூபதியை தாலுகா அலுவலகத்தில் இருந்து விரட்டிவிட்டதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து வருவாய் துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக முதுகுளத்தூர் வட்டாட்சியர் செந்தில்குமாரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, விவசாயி மது போதையில் வந்து ஜமாபந்தியை நடத்தவிடாமல் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதால் காவல்துறையிடம் ஒப்படைக்க அதிகாரிகள் இழுத்து வந்ததாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com