\
மின் ஊழியரால் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

மின் ஊழியரால் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

மின் ஊழியரால் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
Published on

மின் அளவீடு எடுக்க வந்த மின்ஊழியர், வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வாய்க்கால் பகுதியில் வசித்து வருபவர் முகமது அஜித். இவர் தனியார் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆயிஷா சித்திகா (22). முகமது வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட, ஆயிஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மின்சார பயன்பாட்டை அளவீடு செய்வதற்காக மின்வாரிய ஊழியரான ஜெயராமன் (45) வந்துள்ளார். 

மின்சார அளவீட்டை குறியீடு செய்த அவர், வீட்டில் ஆயிஷா தனியாக இருந்தை அறிந்துள்ளார். இதையடுத்து ஆயிஷாவுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை முகமதுவிடம் ஆயிஷா கூற, மன்னார்குடி காவல்நிலையத்தில் முகமது புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் ஜெயராமனிடம் விசாரணை செய்து வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com